சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்
பதவியிலிருந்து நீக்க உள்ளக ரீதியாக சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதித் தலைவர் சஜித்
பிரேமதாஸவை களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்சியின் தலைமைப்
பதவியும் அவருக்கே வழங்க வேண்டும் என்ற அழுத்தும் உள்ளக ரீதியாக
வலுவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தை ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் கொண்டு
வரும் அதேவேளை, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர்
நேரடியாகவும் மறைமுகமாகவும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கி
வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க
தீர்மானமிக்க முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஐக்கிய
தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தாரன கருத்து
வெளியிடுகையில், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட
பின்னர், அவர் விரும்பும் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படும். கட்சியின்
தலைமைத்துவம் புதிய ஜனாதிபதிக்கே கிடைக்க வேண்டும் எனவும் அவர்
குறிப்பிபட்டுள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாக அறிவிக்குமாறு
கோரி ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அலரி மாளிகையை சுற்றிவளைக்க
திட்டமிட்டுள்ளனர்.
அதன் ஊடாக நாடு முழுவதும் உள்ள சஜித் ஆதரவாளர்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment