• Latest News

    August 28, 2019

    சக்தி ரிவி காத்தான்குடியிலிருந்து வெளியேற்றம்!

    காத்தான்குடி நகர சபையின் முறையான அனுமதியின்மை மற்றும் மக்களுக்கு விருப்பமின்மை காரணமாக சக்தி தொலைக்காட்சியின் கிராமத்திற்கு கிராமம் – மக்கள் சக்தி நிகழ்ச்சி பாதியில் இடைநிறுத்தப்பட்டு காத்தான்குடியை விட்டும்  சக்தி குழுமம் வெளியேற்றப்பட்டது.
    கெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கும் சக்தி தொலைக்காட்சி இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும்.
    20 அக்டோபர் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சக்தி தொலைக்காட்சி “தமிழ் பேசும் மக்களின் சக்தி” என தனது கொள்கைக்குரலை பதிவு செய்து தனது பணியை ஆரம்பித்தது.
    “தமிழ் பேசும் மக்களின் சக்தி Shakthi Tv” என கூறும் சக்தி தொலைக்காட்சி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை மாற்றான்தாய் பிள்ளைகளாக இனவாதக் கண் கொண்டு பார்த்ததே வரலாறாக இருக்கிறது.
    நடு நிலை ஊடகம் என்ற விதி முறைகளை மீறி முஸ்லிம் மக்களின் மீது தவறான கற்பனை கதைகளை தொடதேர்சியாக கட்டவிழ்த்துவிட்ட சக்தி தொலைக்காட்சி, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்தை பற்றிய உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தனது வன்மத்தை முஸ்லிம்களின் மீது கொட்டத்தொடங்கியது.
    அதன் தொடராக முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவு இழந்த சக்தி தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் ஊடாக முஸ்லிம் மக்கள் தொடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தனது கொட்டத்தை அடக்கி வாசித்தது.
    அந்த வகையில் (26.08.2019) காத்தான்குடி நகரசபையின் முறையான அனுமதியின்மை மற்றும் மக்களுக்கு விருப்பமின்மை காரணமாக “மக்கள் சக்தி” பாதியில் இடைநிறுத்தப்பட்டு சக்தி குழுமம் காத்தான்குடி பிரதேச மக்களால் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டது.
    இவ் வெளியேற்றம் சக்தி தொலைக்காட்சி மீது காத்தான்குடி மக்கள் கொண்ட காழ்புணர்ச்சியினாலோ கோபத்தினாலோ அல்லாமல் முஸ்லிம் மக்களின் மனங்களை கடந்த காலங்களில் புண்படுத்திய சக்தியின்
    நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு என்பதை சக்தி குழுமம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    -ஹம்ஸா கலீல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சக்தி ரிவி காத்தான்குடியிலிருந்து வெளியேற்றம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top