• Latest News

    August 16, 2019

    இனப்படுகொலைக்கு பொறுப்பான ஒருவர் ஜனாதிபதி

    இனப்படுகொலைக்கு பொறுப்பான ஒருவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதென்பது இந்த நாட்டின் அரசாட்சி தமிழருக்குரியது அல்ல என்பதை வெளிப்படுத்துகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
    வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படடமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழின படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இனப்படுகொலையை ஒரு சர்வ சாதாரணமாக முள்ளியவாய்கால் மண்ணில் நிறைவேற்றியவர்கள்.
    ஒரு இனக்குழுவை இன்னொரு இனக்குழு திட்டமிட்டு படுகொலை செய்தால் அது இனப்படுகொலை. மக்களுக்கு பொறுப்பான அரசாங்கமே ஒரு இனத்தை படுகொலை செய்து முடித்தது. இது பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
    தருஸ்மன் அறிக்கையில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை இனப்படுகொலை என்று ஐ.நா சபை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.
    அப்படியான இனப்படுகொலைக்கு பொறுப்பான ஒருவரே மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருகின்றார் என்றால் இந்த இலங்கை அரசாட்சி தமிழர்களுக்குரியது அல்ல என்பது தான் உண்மை எனத் தெரிவித்தார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இனப்படுகொலைக்கு பொறுப்பான ஒருவர் ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top