இது
2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன
செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள்
ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும்.
ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி.
கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம்
கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார்
இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80.
இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.
“காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி
சாம்பார் செய்வேன். ஆறு மணி அளவில் இட்லி அடுப்பை பற்ற வைப்பேன். 12 மணி
வரைக்கும் இட்லி ஊத்துவேன்” என்கிறார் கமலாத்தாள்.
உங்களால் எப்படி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்க முடிகிறது? என்று கேட்டதற்கு,
“அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய்
இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200
ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான்
இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை
நாட்கள் நான் வாழப்போகிறேன்?” என்று அவர் கூறுகிறார்.
“எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் இங்கு
வந்து வாங்கி செல்வார்கள். சிலர் இங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள்.
தானாகவே இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டு செல்வார்கள். சிலர் காசு
கொடுப்பார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்கள். நான்
கண்டுகொள்ள மாட்டேன். ஏழைகள் வந்து சாப்பிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும்”
என்கிறார் கமலாத்தாள் தெரிவித்தார்.
“நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி,
கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என்
உடலில் தெம்பு இருக்கிறது.” என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும்
ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.
மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி
சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை
என்று அவர் கூறுகிறார்.
இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர்
ராமசாமி கூறுகையில், “இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய்
இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல,
நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில்
500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை.
ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார்.
சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்” என்கிறார்.
“பாட்டி சில நாள் போண்டா சுட்டுக்
கொடுப்பார். இட்லி ஒரு ரூபாய். போண்டா இரண்டு ரூபாய். வேறு எங்கு
சாப்பிட்டாலும் இங்கிருக்கும் சுவை வராது. இங்கு 10 இட்லி சாப்பிட்டால்
வயிர் நிறைந்துவிடும்” என்கிறார் பாட்டிக்கடைக்கு அருகில் வேலை பார்க்கும்
செல்வசுந்தரம்.
BBc -
0 comments:
Post a Comment