உலகப்புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின்
கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் இது
குறித்த அறிவிப்பையும், சிலையின் சில புகைப்படங்களையும்
வெளியிட்டிருந்தார்கள்.
அதில், “ெபாலிவூட்டின் ஐகான் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் அவரது மெழுகுச் சிலையை அமைக்க உள்ளோம்.
சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு அது ஒரு தனிப்பட்ட சேர்க்கையாக இருக்கும்.
உலகத்திலேயே அவரது வடிவம் ஒரு தனித்துவமானது,” என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
நேற்று முன்தினம் அது பற்றி டுவீட் செய்த போனி கபூர், “ஸ்ரீதேவி எங்களது
இதயத்தில் மட்டும் வாழவில்லை, மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்திலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் சிலையைப் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம்,” என தெரிவித்திருந்தார்.நேற்று அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், ஸ்ரீதேவியின் சிலை அந்த அளவிற்கு ஸ்ரீதேவி போல இல்லை என்று அதற்குள் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
0 comments:
Post a Comment