மாத்தறையில் சிங்கள - முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட
தனிப்பட்ட பிரச்சினை முற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் இந்த மோதல் சம்பவம் இன்று மாலை ஏற்பட்டுள்ளது. சிங்கள
இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஊரில்
இருந்து நேற்று தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து
அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியை சேர்ந்த சிங்கள – முஸ்லிம் பெரியோர் அமைதி நடவடிக்கைகளை எடுத்தபடியால் நிலைமை சுமுகமாகியுள்ளது.
சுமார் 15 முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொிவிக்கப்படுகின்றன. இதே வேளை, இத்தகைய நடவடிக்கைகளை சிலர் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment