• Latest News

    September 26, 2019

    கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்ய நீதிமன்றம் சிஐடியினருக்கு அனுமதி

    பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்வதற்கான அனுமதியை சிஐடியினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
    2005 இல் அமெரிக்க பிரஜையாகயிருந்த காலப்பகுதியில் பிரஜாவுரிமை சட்டம் குடிவரவு குடியகல்வு சட்டம் தேர்தல் சட்டம் ஆகியவற்றை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறித்த விசாரணைக்காகவே சிஐடியினர் நீதிமன்றத்தின் இரு அனுமதிகளை பெற்றுள்ளனர்.
    இதனடிப்படையில் கொழும்பு நீதவான்  லங்கா ஜயரட்ண குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரையும் அம்பாந்தோட்டைக்கான உதவி தேர்தல் ஆணையாளரையும் விசாரணைக்கு அவசியமான ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
    இதேவேளை 2005இல் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட வேளை கோத்தபாய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார் என நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள சிஐடியினர் தாங்கள் கோரிய வேளை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
    தனது அமெரிக்க பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் புதிய அடையாள அட்டையையும் கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்ய நீதிமன்றம் சிஐடியினருக்கு அனுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top