மத்துகமயில் உயிருக்கு போராடிய கணவன் மற்றும் மனைவியின் உயிரை காப்பாற்ற பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும போராடியுள்ளார்.
வாகன
விபத்தில் காயமடைந்த இருவரை, தனது வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து
செல்லப்பட்ட போதும் கணவன் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று
மாலை களுத்துறையில் இருந்து மத்துகம வரை பயணித்த கெப் வண்டியுடன் மோட்டார்
சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கணவன் - மனைவி
படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் விபத்து இடம்பெற்ற
வீதியில் பயணித்த பிரதி அமைச்சர், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு
அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனினும் வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றவுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனரான கணவன் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment