கொலம்பியா நாட்டில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான
தொடர்பை இழந்தததையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக
நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் அல்பன் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து
விபத்துக்குள்ளானதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில்
ஹெலிகொப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிலந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment