• Latest News

    March 19, 2015

    காத்தான்குடி பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டமும் -புதிய நிருவாகிகள் தெரிவும்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 19-03-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

    இங்கு பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் கடந்த பொதுச் சபைக் கூட்டறிக்கை,ஆண்டறிக்கை,வருடாந்த கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டதுடன் ,நிதியத்தில் அங்கத்தவராக இருந்து மரணித்தவர்களின் குடும்பத்திற்கு மரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் ,புதிய அங்கத்தர்களுக்கு அங்கத்துவ அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.

    இதன் போது மேற்படி ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது இதில் நிதியத்தின் புதிய தலைவராக கே.எம்.ஏ.அஸீஸூம் செயலாளராக ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபியும்,பொருளாளராக எஸ்.எம்.யூசுப் லெப்பையும் , உப தலைவராக மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)யும் ,உப செயலாளராக எம்.வை.எம்.இஸ்மாயிலும் ,நிருவாக சபை உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.முஹைதீனும், ஏ.எல்.அலியார் லெப்பையும் தெரிவு செய்யப்பட்டனர்.

    ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியக் காரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பாராளுமன்ற 1999ம் வருட 40ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நம்பிக்கை நிதியத்தில் 138 பேர் தற்போது அங்கத்தவர்களாக இருப்பதாக பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபி தெரிவித்தார்.






     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காத்தான்குடி பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டமும் -புதிய நிருவாகிகள் தெரிவும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top