(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின்
ஏற்பாட்டில் நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 500
மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கு அனைத்து நவீன
வசதிகளும் கொண்ட புதிய கட்டிடத் தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பான
முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று
சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தற்போது கொரியாவில் இடம் பெறுகின்ற நகரத்
திட்டமிடல், அபிவிருத்தி தொடர்பான இரு வாரகால பயிற்சி மாநாட்டில்
பங்குபற்றிக் கொண்டிருக்கின்ற கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி
ஏ.எம்.றகீப் அவர்கள், மேற்படி வேலைத் திட்டத்தை துரிதப்படுத்தும் பொருட்டு
விடுத்த வேண்டுகோளின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற
உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நகர
திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில்
ஆராய்ந்தார்.
இதில்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மு.கா. செயலாளர் நாயகமுமான ஜனாதிபதி
சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம், முன்னாள்
மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான
கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர பிரதி
முதல்வர் காத்தமுத்து கணேஷ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும்
முன்னாள் உறுப்பினர்கள், பொறியியலாளர்களான ஏ.எம்.சாஹிர், எம்.எம்.ஹினாம்
உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment