அரசியல் வரலாற்றில் 5 தடவைகள் பிரதமராக இருந்து இடைநடுவே பதவியை இழந்தார் என்ற சாதனையை ரணில் விக்கிரமசிங்க இன்று பதிவு செய்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க 5ஆவது முறையாக தனது பிரதமர் பதவியை 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யாமல் இடை விலகுகிறார்.
1993ஆம் ஆண்டு ஒரு வருடமும் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை
இரண்டு வருடங்களும் 2015ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கும் ஓகஸ்ட்வரை இடைக்கால
அரசின் பிரதமர் மற்றும் 2015 ஓகஸ்ட் தொடக்கம் 2018ஆம் ஒக்டோபர் வரை சுமார் 3
வருடங்களும் என தனது பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்திருந்தார்.
தற்போது 2018 டிசெம்பர் நடுப்பகுதியில் மீளவும் பிரதமராக நியமிக்கப்பட்ட
ரணில் விக்கிரமசிங்க, ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்பாக இன்று நவம்பர்
20ஆம் திகதி பதவியைத் துறக்கிறார்.
1993ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொலை
செய்யப்பட்டதையடுத்து விஜேதுங்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். எனினும் ஒரு வருடத்தில்
பிரதமர் பதவியையிழந்து தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைக் கண்டது.
சந்திரிக்க பண்டாரநாயக்க பிரதமரானார்.
தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். எனினும் அப்போதைய ஜனாதிபதி
சந்திரிக்க குமாரதுங்க, 2014ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக்
கலைத்தார். அடுத்து ரணிலின் பதவிக் காலம் முடிவடைந்தது. 2004ஆண்டில் புதிய
பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் ஜனாதிபதியாக
மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக
ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 17இல் நடந்த பொதுத் தேர்தலில்
ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்ற போதும் பெரும்பான்மை இல்லாமையால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து அரசமைத்தது. அதில்
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். அது அவரது நான்காவது பிரதமர்
பதவிக்காலமாகும்.
எனினும் 3 ஆண்டுகளில் 2018 ஒக்ரோபர் 26 அரசியல் புரட்சியில் ரணில்
விக்கிரமசிங்க பிரதமர் பதவியையிழந்தார். மீளவும் 51 நாள்களின் பின்னர்
5ஆவது முறையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். இந்த நிலையில் இன்று பதவியைத் துறக்கிறார்.

0 comments:
Post a Comment