• Latest News

    November 20, 2019

    மற்றுமொரு பௌத்த இனவாத அமைப்பான நவ சிங்கள ராவய கலைக்கப்படவுள்ளது - அதன் செயலாளர் அறிவிப்பு

    அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புக்கள் தேவையில்லை என நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். 
    இதனால் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
    கூடிய விரைவில் புதிய பாராளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிகபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    அத்துடன் தங்களது குழுவிலும் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மற்றுமொரு பௌத்த இனவாத அமைப்பான நவ சிங்கள ராவய கலைக்கப்படவுள்ளது - அதன் செயலாளர் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top