• Latest News

    November 22, 2019

    கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    கல்முனை மாநகர சபை ஊழியர்களின் நலன்கருதி கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஒழுங்கு செய்திருந்த தொற்றா நோய் பரிசீலனை தொடர்பான மருத்துவ பரிசோதனை நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் கல்முனை பொது நூலக மண்டபத்தில் ஆரம்பமானது.

    கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இம்மருத்துவ முகாமில் கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் இருநூறுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, உடல் மருத்துவ பரிசோதனைகளுக்குட்பட்டனர்.

    இதன்போது கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், நீரிழிவு, பாலியல் தொற்று, உடல் திணிவுச் சுட்டெண் உள்ளிட்ட விடயங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

    இம்மருத்துவ பரிசோதனைகளில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.ஏ.எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுதீன், எம்.ரவிச்சந்திரன், ஐ.எம்.இத்ரீஸ் உட்பட மருத்துவ மாதுக்களும் தாதியரும் மருத்துவ பரிசோதனைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top