• Latest News

    November 21, 2019

    புகையிரத்தில் மோதுண்டு புகையிரத பாதுகாப்பு தடை பாதுகாவலர் உயிரிழப்பு

    கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத்தில் மோதுண்டு ஹட்டன் புகையிரத பாதுகாப்பு தடையின் பாதுகாவலர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

    ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத பாதுகாப்பு தடையில் நேற்று நபரொருவர் சடலமாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவருக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

     52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

    குறித்த பாதுகாப்பு தடையின் காவலாளராக பணிபுரிந்து வந்துள்ள இவர். புகையிரதம் வந்துக் கொண்டிருந்த போது புகையிரத கடவையில் தனது கழுத்தை வைத்தே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புகையிரத்தில் மோதுண்டு புகையிரத பாதுகாப்பு தடை பாதுகாவலர் உயிரிழப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top