• Latest News

    November 22, 2019

    சஜித்தால் வலுவான போட்டியை கூட ஏற்படுத்த முடியவில்லை: நவீன் திஸாநாயக்க

    ஜனாதிபதித் தேர்தலில் யார் களமிறங்க வேண்டும் என்ற மக்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்பட்டது, ஆனால் அதன் விளைவுதான் வருத்தமளிக்கிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
    நேற்றைய தினம், பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அவர் அமைச்சின் ஊழியர்களுடன் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
    அவர் மேலும்,
    எங்களின் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது, மேலும் அவரால் ஒரு வலுவான போட்டியை கூட ஏற்படுத்த முடியவில்லை.
    நடந்தது குறித்து வருந்துகிறோம். ஆனால் அது ஏன் நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் விரல் காட்ட முடியாது, மாறாக, இந்த தோல்வியை ஒரு கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    ஒரு கட்சியாக நாங்கள் எங்களை சுயவிமர்சனம் செய்திருக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஜித்தால் வலுவான போட்டியை கூட ஏற்படுத்த முடியவில்லை: நவீன் திஸாநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top