• Latest News

    November 19, 2019

    எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது - சஜித் பிரேமதாசா

    52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காது விட்டுவிட்டனர் என சஜித் பிரேமதாசா கவலை வெளியிட்டுள்ளார்.
    ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தனக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதிகளை  திங்கட்கிழமை (18) மாலை கோல்பேஸ் ஹோட்டலுக்கு அழைத்து அவர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். மூடிய அறைக்குள் நடந்த இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
    தேர்தல் பிரச்சாரக் காலத்தில் நான் சகலரையும் நம்பினேன். எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது. எனக்கு உரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற்போது கடனாளியாகியுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன்.
    எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர் பாம்புகளை போல செயற்பட்டனர். இந்த 2 தரப்பினரும் எனது தோல்விக்கு வழிவகுத்தனர்.
    எங்கள் அணியில் இருந்த சிலர், அமெரிக்காவுடன் மிலேனியம் ஒப்பந்தத்தை செய்ய ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் பௌத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
    என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே இந்தப் பயணத்தில் இறங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கென ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொள்ளவில்லை.
    இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய வேண்டுமென, கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும் பலர் நான் வெற்றியடை வேண்டுமென ஆசைப்பட்டனர்.
    தற்போதைய நிலையில், புதிய கட்சி ஆரம்பிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அதற்காக ரணிலுடன் தலைமைப் பதவிக்காக சண்டைபிடிக்கவும் மாட்டேன். கட்சியினர் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளேன் எனவும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது - சஜித் பிரேமதாசா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top