• Latest News

    December 31, 2019

    நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும்

    நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

    2020 ஜனவரி முதலாம் திகதி முதல் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு அதே முறையில் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதன்படி, 2016 ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிகரிப்பு காரணமாக 2015 உடன் ஒப்பிடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதமாக அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    2016ஆம் ஆண்டு வெளியான சுற்றறிக்கையின் ஐந்து கட்டங்களின் கீழ் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை, தலா இரண்டாயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
    அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2016ஆம் ஆண்டு முதலாம் முதல் நான்கு சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாம்கட்ட சம்பள உயர்வு நாளை அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top