முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடம் இன்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது.
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் விஷேட பொலிஸ் குழுவே இந்த விசாரணைகளை
முன்னெடுத்துள்ளது.
அதன்படி இன்று முற்பகல் முதல் சுமார் 3 மணி நேர விசாரணைகள் முன்னாள்
அமைச்சர் ரிஷாத்திடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவரிடம் வாக்கு மூலம்
ஒன்று பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் சி.ஐ.டி.யின் உயர்
அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ஒருவர் கடந்த உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின் பின்னரான காலப்பகுதியான ஏப்ரல் 26 ஆம் திகதி
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்
விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சகோதரர் அரச வாகனத்தில் பயணிக்கும் போது இராணுவத்தினரால் வீதி
சோதனையின் போது, கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பிலேயே இன்று -30- முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசாரிக்கப்ப்ட்டதாக அரிய முடிகின்றது.
(எம்.எப்.எம்.பஸீர்)

0 comments:
Post a Comment