2600 வருடங்களுக்கு முன்னரே கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார் என கலபொட அத்தே ஞானசார குறிப்பிட்டார்.
மத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
அன்னதானம் பெற சென்ற பிக்கு ஒருவருக்கு வித்தியாசமான உணவு தானமாக
வழங்கப்பட்டிருந்ததை அவதானித்த புத்த பெருமான் அதனை உண்ணுவதை தடை செய்தார்.
குறித்த உணவு பாம்பு கறி என கூறியே புத்த பெருமான் அதனை தடை செய்தார்.
குறித்த உணவை உற்கொண்டால் ஒருவகை காய்ச்சல் வரும் என அவர் அன்றே
கூறிவிட்டார்.
பாம்பு குதிரை வௌவால் பன்றி உள்ளிட்ட 10 வகையான மாமிசங்களை புத்த பெருமான் தடை செய்துள்ளார் .

0 comments:
Post a Comment