• Latest News

    February 05, 2020

    விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி : சிவஞானம் சிறீதரன்

    விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி சிங்களத் தலைவர்கள் கடந்த கால படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை எமது உரிமைகளைத்தர மறுத்த போதுதான் தமிழர்கள் போராடினார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
    கட்டைக்காடு கேவில் பகுதி மக்களுடனான சந்திப்பு நடைபெற்ற போது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
    பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி தேடுங்கள் என்ற கருத்து மனநிலை பாதித்தவர் ஒருவரின் கதையாகத்தான் உள்ளது இந்த அரசாங்கம் தாங்கள் புதைத்த இடத்தைக்காட்ட வேண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களை கொடூர வெறியுடனே பார்க்கிறார்கள்.
    தமிழர்களின் இரத்தங்களைக்குடிக்க காத்துக்கொண்டிருப்பது போன்றும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்து கொண்டிருக்கின்றது. வீமல வீரவன்ச ஒரு நவீன மனநோயாளி எனவும் இந்த அரசு தமிழர்களை அடக்கி ஆளவும் ஓடுக்கி ஆளவும் தொடர்ந்து முயற்சிக்கிறது என்றார்.
    குறித்த சந்திப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உபதவிசாளர் கயன் பிரதேசசபை உறுப்பினர்களான றமேஸ்,வீரவாகுதேவர் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஞானம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விமல் வீரவன்ஸ ஓரு நவீன மனநோயாளி : சிவஞானம் சிறீதரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top