• Latest News

    March 28, 2020

    பிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு

    கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர்.

    கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top