பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ள இடங்களில் உள்ள பொதுமக்கள் அதற்கமைய நடந்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இந்த
ஊடரங்கு சட்டம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை அதிகமாகக் கொண்ட புத்தளம்,
சிலாபம், நீர்கொழும்பு - கொச்சிக்கடை, வத்தளை, ஜாஎல ஆகிய இடங்களில்
உள்ளவர்களின் சுய தனிமைப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்காகவே
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் புத்தளம், சிலாபம் மற்றும்
கொச்சிக்கடை போன்ற இடங்களில் உள்ளவர்கள் வீடுகளில் குழுமியிருந்ததுடன்
ஊரடங்கு சட்டத்தையும் மீறியுள்ளதாக காவல்துறையின் உதவி காவல்துறை அதிபர்
அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே பொலிஸ் ஊடரங்கு சட்டத்துக்கு
அப்பால் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்புக்கான சுய தனிமைப்படுத்தல்
நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை
பொலிஸ் ஊடரங்கு சட்டம் நேற்று தேர்தல் வேட்புமனு தாக்கலுக்காக
நீக்கப்பட்ட வேளையில் இந்த பிரதேசங்களின் மக்கள் வீதிகளில்
குழுமியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்ந்த ஏனைய நேரங்களில் வெளியில் செல்லவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

0 comments:
Post a Comment