எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சுப நேரம் இல்லாமையினால் சிக்கல்
நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச்
மாதம் 3ஆம் திகதி சுபநேரம் உள்ள போதிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒரு
நாள் பிற்போட நேரிடும். அவ்வாறு ஒரு பிற்போட்டால் வேட்புமனு தாக்கல்
மற்றும் தேர்தல் நடத்தப்படும் நாளும் பிற்போட நேரிடும்.
அவ்வாறு
பிற்போடும் போதும் அங்கும் சுப நேரம் குறுக்கிடும் எனவும் அந்த
பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.
அதற்கமைய
தொடர்ந்தும் ஜோதிடர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டு எப்படியாவது
திங்கட்கிழமை, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment