ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகுவது
தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக
அரசாங்கத்திற்கு ஆதரவான சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின்
இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான தீர்மானங்கள் தொடர்ந்தும்
எடுக்கப்படுமாயின், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து இலங்கை விலக
வேண்டும் என சில பிரதான சிங்கள தேசிய அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்சவிடம் யோசனை முன்வைத்துள்ளன.
இந்த யோசனை குறித்து கூடிய
கவனத்தை செலுத்துவதாக ஜனாதிபதி, அந்த அமைப்புகளிடம் கூறியுள்ளதாக
அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த
அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஜெனிவா யோசனையில் இருந்து இலங்கை விலகியமை
சம்பந்தமாக ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வைத்து
கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த இணையத்தள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது
குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் விமர்சகர்கள், இந்த தகவலானது
பெரும்பாலும் சிங்கள பௌத்த இனவாத வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும்
பிரசாரமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இலங்கை இப்படியான
தன்னிச்சையான தீர்மானத்தை எடுத்தால், அது சர்வதேச ரீதியாக பாரதூரமான
விளைவுகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாகும் எனவும் அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இலங்கை எதிராக பொருளாதார தடைகளை
விதிப்பது முதல் கடன் உதவிகளை நிறுத்துதல், சுற்றுலா தடை உட்பட பல கடும்
பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் என்பதுடன் நாடு பாரிய பொருளாதார
வீழ்ச்சிக்கு உள்ளாகி, உலகில் தனிமைப்படுத்தப்படும் நிலைமை உருவாகும்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமைகள் உடனடியாக ஏற்படாது
என்றாலும் அப்படியான நிலைமை கட்டாயம் உருவாகும். சர்வதேச அமைப்புகளுடன்
இருக்கும் தொடர்புகள், உடன்படிக்கைகள், வாக்குறுதிகள் காரணமாகவே
நாட்டுக்குள் ஓரளவுக்கு மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்படியான தொடர்புகளை இல்லாமல் செய்வது ஜன சமூகத்தின் பாதுகாப்பு இன்மைக்கு
காரணமாக அமைந்து விடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment