கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6
மணிக்கு அமுல்செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட்
19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல்
செய்யப்பட்டிருந்தது.
இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு
தளர்த்தப்பட்டு மீண்டும் அதேதினத்தில் பகல் 12 மணிக்கு மீண்டும்
அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6மணிக்கு தளர்த்த்தப்படவுள்ளது.

0 comments:
Post a Comment