வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டொலரில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக உலக பங்குச்
சந்தைகளில் பல தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து பொருளாதாரத்திலும்
பல நாடுகள் அடிவாங்கியுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பவுண்ட் ஒன்றுக்கு ஈடாக அமெரிக்க டொலர் மாற்று விகிதம்
மார்ச் 18ஆம் திகதி நேற்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
கடந்த, 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து
விலகுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்திய போது வீழ்ச்சியடைந்ததை விட தற்போது
கடும் சரிவை கண்டுள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் இது வரை, வரலாற்றில் இல்லாத மிக கடுமையான வீழ்ச்சி இது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் இன்று 186.66 ரூபாவாக காணப்படுகின்றது
0 comments:
Post a Comment