இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி கொழும்பின் பல
பகுதிகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி
தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக நேற்றைய தினம்
கண்டுபிடிக்கப்பட்ட நபர் தொடர்பில் இன்றையதினம் கருத்து வெளியிடும் போது
அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
குறித்த நோயாளி தனது நோயை
யாரிடமும் சரியான முறையில் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். அவர் பல்வேறு
இடங்களில் ஒன்றுகூடல்களில் கலந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த
நோயாளி கடந்த நாட்களாக கொழும்பின் பல நகரங்களுக்கு பயணங்கள்
மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி குறித்த நபர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வறான
ஒரு நபரால் நாடு முழுவதும் நோய் தொற்றினை பரவ செய்ய முடியும். குறித்த
நபரும் அவரது தந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனை தனியார்
மருத்துவமனைகளில் உறுதி செய்துக் கொண்டுள்ளனர். எனினும் அது தொடர்பில்
அறிவிக்காமல் பல்வேறு பகுதிக்கு சென்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு
விடயமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment