ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று 4 மாலை கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடியது. சஜித் தரப்பில் எவரும் இதில்
கலந்துகொள்ளவில்லை.மலிக் சமரவிக்ரம தாமதமாகி வந்து சில நிமிடங்கள் இருந்து
வெளியேறிவிட்டாரென தகவல்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அடைப்படை கொள்கைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள்
சக்தி என்ற சஜித்தின் புதிய அரசியல் கூட்டோடு சேர்வதென
தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி ரணில் விக்கிரமசிங்க வேட்புமனு குழுவுக்கு தலைமை தாங்குவார் . சஜித் ,அகில ,ரவி கருணாநாயக்க ,கபீர் ஹாசிம் ,நவீன திஸாநாயக்க , ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரை இந்த குழுவில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் அமைப்பாளர்களை ரணில் தெரிவு செய்வார். அதேசமயம் தேர்தல்
செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு சஜித்திடம் வழங்கப்படும்.
தேசியப்பட்டியல் எம் பிக்கள் தெரிவை ரணில் தீர்மானிக்கவும் யானை
சின்னத்தில் மட்டும் போட்டியிடவும் செயற்குழு அங்கீகாரம்
வழங்கியுள்ளது.இந்த விடயங்கள் சஜித் அணிக்கு தெரிவிக்கப்பட்டு இறுதி
செய்யப்படும்.
sivaraja
0 comments:
Post a Comment