அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில்
போட்டியிட்டு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற
உறுப்பினராக இருந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், தேசிய காங்கிரசின்
தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் முன்னிலையில் இன்று
சம்மாந்துறையில் வைத்து இணைந்து கொண்டார்.
இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பிராக இருந்த போதிலும், அக்கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. ஆட்சி கவிழ்ப்பு 52 நாட்களின் போது மஹிந்த அணிக்கு ஓடினார். இவர் சில நாட்கள் ஒழிந்தும் இருந்தார். இப்போது தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர் மொட்டுக் கட்சிக்கு மாறுவார் என்றே எதிர் பார்க்கப்பட்டது. மொட்டுக் கட்சியில் தமக்கு வேட்பாளர் டிக்கட் கிடைக்காது என்பதனால் தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளார்.
0 comments:
Post a Comment