• Latest News

    March 10, 2020

    துரோகிகளுக்கு தோரணம் போடாதீர்கள்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

    -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
    தேசிய காங்கிரஸ் தலைவர் கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களே! போலிகளைக் கண்டு நீங்களும் ஏமாறவா போகிறீர்கள்? இவ்வாறானதொரு கேள்வியையே நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களிடம் அன்றும் கேட்டேன். ஆனால், நான் கூறியதனை முதலில் அவர் நிராகரித்தார். பின்னர் 2018 ஆம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி காலையில் என்னுடன் தொடர்பு கொண்ட ரிஷாத் பதியுதீன் அவர்கள் நான் முன்னர் கூறியது சரியாகப் போகிறது என்று என்னிடம் தெரிவித்தார்.


    எனவே, கௌரவ ரிஷாத் பதியுதீனை ஏமாற்றிய அதே நபரிடம் நீங்களும் ஏமாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்த நபரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். நான் கூறுவதை நீங்களும் நிராகரிப்பீர்களாயின் உங்கள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பலவீனப்படுவதுடன் கெட்ட பெயரையும் சம்பாதிக்க நேரும். இது உங்களுக்கு நான் விடுக்கும் அன்பான எச்சரிகை.

    நீங்களும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலைமை உங்களுக்கும் ஏற்படும். சமூக அக்கறை, இனத்தின் மீதான பற்றுக் கொண்டவர்களும் பதவி ஆசை அற்றவர்களுமே உங்கள் கட்சியில் இருப்பதாக கூறும் நீங்கள் குறித்த நபர் தொடர்பில் இன்னும் அறிந்து கொள்ளாமல் அரவணைத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: துரோகிகளுக்கு தோரணம் போடாதீர்கள்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top