• Latest News

    March 28, 2020

    சாய்ந்தமருது கடற்கரை மற்றும் பொது இடங்களை கிருமி நீக்கி, சுத்தம் செய்யும் பணிகள் உதவும் கரங்கள் அமைப்பினால் முன்னெடுப்பு..!

    (யூ.கே. காலித்தீன்)
    "கொரோனா கொவிட் 19" வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட  கடற்கரை அண்டியுள்ள  பொது இடங்களை கிருமி நீக்கி கொண்டு, சுத்தம் செய்யும் பணிகள் (27) வெள்ளிக்கிழமை மாலை  உதவும் கரங்கள்அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
    சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் பெயரிலும்,  கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் கே. சுகுணனின் விஷேட ஆலோசனைக்கு அமைவாகவும், தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி என்.ஆரிபின்  வழிகாட்டலிலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜ்வத்தின், நேரடி கண்காணிப்புக்கு அமைவாகவும், சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தாவின் மேற்பார்வையின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    மக்கள் அதிகம் நடமாடுகின்ற கடற்கரை, பெண்கள் சந்தை, கடற்கரை பூங்கா, ஆமிக் கேம், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து கடற்கரை அண்டியுள்ள  இரு மருங்கிலும் உள்ள அனைத்து, கடைகள் மற்றும் வீடுகளின் நுழைவாயில் கதவுகள், சுவர்கள் யாவும் உதவும் கரங்கள் அமைப்பினால் இவ்வாறு கிருமி நீக்கி, சுத்தம் செய்யப்பட்டது.
    அதேவேளை இவ் அமைப்பினால் கொரோனா வைரஸிலிருந்து மக்களை விழிப்புணர்வு செய்யும் வகையில் துண்டுப்பிரசுரமும் வீடு வீடாகச் சென்று அறிவுரை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது கடற்கரை மற்றும் பொது இடங்களை கிருமி நீக்கி, சுத்தம் செய்யும் பணிகள் உதவும் கரங்கள் அமைப்பினால் முன்னெடுப்பு..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top