சஹாப்தீன் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், அலிசாஹிர் மௌலானாவுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.அமீர் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சிலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த முடிவினை தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸீம் அம்பாரை மாவட்டத்தில் இணநை;து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்;த்தை ஒன்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்றது. இதன் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதில் உள்ள சாதகபாதங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதானால் கிடைக்கும் நன்மையை தனியே முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் அனுபவிக்கக் கூடிய வகையிலேயே வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்படும் என்று இப்பேச்சின் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை நிறுத்துவது என்ற தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பேச்சுவார்த்தையின் இறுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதற்கும், முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment