பௌத்த துறவிகள் அரசியலில் ஈடுபடுவதால் நாடு எந்த பயனையும் அடையாது என
இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களான மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின்
தலைமை தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துறவிகள் அரசியலில் ஈடுபடுவது புத்த சாசன, மதம், தர்மம் மற்றும்
பௌத்த பரம்பரையின் பெரும் சரிவுக்கு வழிஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் திருத்தப்பட்ட மார்ச் 12 அறிக்கையினை
மகாநாயகர்களுக்கு கையளித்த போதே, தேரர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பௌத்த துறவிகளுக்கு அரசியல் பொருத்தமானதல்ல என்று மல்வத்த மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment