எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது கட்சியின் பெயரிலேயே போட்டியிடவுள்ளதாக
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி அறிவித்துள்ளது.
இதனை இன்று கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தார்.
யானை
சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு
தீர்மானம் எடுத்தமையை அடுத்தே சஜித் அணி இந்த முடிவை எடுத்துள்ளது.
பொது
தேர்தலில் போட்டியிடும் கட்சியின் சின்னம் குறித்து, ரணில் மற்றும் சஜித்
தரப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவுகள்
எட்டப்படாத நிலையில் நிறைவுபெற்றிருந்தன.
இந்நிலையிலேயே, தமது கட்சியின் பெயரிலேயே போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி அறிவித்துள்ளது.
இதேவேளை
தமது கட்சி மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ
தலைமையிலான பொதுஜன பெரமுன இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment