பிரித்தானியாவில் அரச மட்டத்தில் மற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அந்நாட்டின் சுகாதார செயலாளர் மெட் ஹன்கூக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சுயதனிமையாக்கலுக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை
பிரித்தானிய சுகாதார அமைச்சர் நடின் டோரிஸும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு
உள்ளாகி சுயதனிமைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 550,000க்கும்
மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது.
கொரோனா
வைரஸ் தொற்றினால் பிரித்தானியாவில் இதுவரை 14 ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 759 பேர் வரையில்
உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment