இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை பகுதியளவில் விலகிக் கொள்ளப்படவுள்ளது.
இதன்போது வெளியே செல்லும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு
சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு
நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்குமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசையாக அருகில் நிற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருக்கும்
இடையில் ஒரு மீற்றர் தூரத்தில் நிற்குமாறு கொழும்பு வைத்தியசாலையின்
பிரதான தாதி புஷ்பா ரமணி டி சொய்ஸா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment