எஸ்.றிபான் -
நாட்டில் கொரனா வைரஸின் தாக்கம் குறித்து மக்களிடையே பரவலாக கதைகளும், பயமும் வைரலாகிக் கொண்டிருப்பதனால் பொதுத் தேர்தல் குறித்தான கதைகள் மக்களிடையே வைரலாக முடியாததொரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தமதாக்கிக் கொள்வதற்குரிய பேச்சுவார்த்தைகளிலும், வேட்பாளர் தெரிவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டன. பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியை அமைக்க வேண்டுமென்றும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பேரினவாதக் கட்சிகள் திட்டங்களை வகுத்துக் கொண்டன. ஆயினும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் பின்னரான முரண்பாடுகள் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாததொரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அதிக மவுசு ஏற்படுத்துவதற்கும், தேர்தலின் பின்னர், சிறுபான்மைக் கட்சிகளுடனும், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேரம் பேசும் நிலைமைகள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டில் கொரனா வைரஸின் தாக்கம் குறித்து மக்களிடையே பரவலாக கதைகளும், பயமும் வைரலாகிக் கொண்டிருப்பதனால் பொதுத் தேர்தல் குறித்தான கதைகள் மக்களிடையே வைரலாக முடியாததொரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தமதாக்கிக் கொள்வதற்குரிய பேச்சுவார்த்தைகளிலும், வேட்பாளர் தெரிவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டன. பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியை அமைக்க வேண்டுமென்றும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பேரினவாதக் கட்சிகள் திட்டங்களை வகுத்துக் கொண்டன. ஆயினும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் பின்னரான முரண்பாடுகள் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாததொரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அதிக மவுசு ஏற்படுத்துவதற்கும், தேர்தலின் பின்னர், சிறுபான்மைக் கட்சிகளுடனும், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேரம் பேசும் நிலைமைகள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே
முஸ்லிம்களின் பாராளுமன்றத் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள
வேண்டுமென்ற கோரிக்கைகள் பொதுவெளியில் பேசப்பட்டுக் கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்ற விருப்பம்
முஸ்லிம்களிடையே காணப்பட்டன. ஆயினும், அதற்குரிய சரியான வழிவகைகளை முஸ்லிம்
கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. முஸ்லிம் கட்சிகளிடையே விட்டுக் கொடுப்பு
இருக்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் தங்களுக்குள் தனியான நிகழ்ச்சி
நிரல்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டன. மேலும்,
முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டுமென்ற முயற்சியில் ஒரு சில
உலமாக்களும் ஈடுபட்டுக் கொண்டார்கள். இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள்
பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள தேசிய காங்கிரஸை இணைத்துக் கொள்ளாததொரு
ஒற்றுமைப்படுத்தலையே மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
முஸ்லிம் காங்;கிரஸையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும்
ஒற்றுமைப்படுத்துவதனையே முஸ்லிம்களின் ஒற்றுமையாக கருதிக் கொண்டார்கள்
என்றுதான் சொல்ல வேண்டும். ஒற்றுமைப்படுத்தல் என்பது ஒரு தரப்பினை
பலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே இருந்தது.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
முஸ்லிம்
காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சஜித் தலைமையிலான ஐக்கிய
மக்கள் சக்தியில் பங்காளிகளாக இணைந்துள்ளனர். இவ்விரு கட்சிகளும் ஐக்கிய
மக்கள் சக்தியுடன் சில மாவட்டங்களில் இணைந்தும், தனித்தும்
போட்டியிடுவதற்குள்ளன. இவ்விரு கட்சிகளும் சில இடங்களில் விட்டுக்
கொடுப்புக்களையும் செய்துள்ளன.
இதனிடையே முஸ்லிம்
காங்கிரஸின் கோட்டையாக எனக் கருதப்படும் அம்பாரை மாவட்டம் இம்முறை
பாதுகாக்கப்படுமா என்பதில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாரை மாவட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில்
வீழ்ச்சியடைந்து இருந்தது. அதே வேளை, இம்மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் வாக்கு வங்கிகள் அதிகரித்துள்ளன. கடந்த பொதுத் தேர்தலில்
சுமார் 33 ஆயிரம் வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்
கொண்டது. இந்த வாக்குகள் 2018ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுமார்
41 ஆயிரத்திற்கும் வாக்குகளாக அதிகரித்துள்ளன. இதனால், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டால் இரண்டாம்
சுற்றில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கின்றது.
அதே
வேளை, முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று பாராளுமன்ற
உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இம்முறை ஐக்கிய தேசிய
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து
போட்டியிட்டாலும், தனித்துப் போட்டியிட்டாலும் ஒரு ஆசனத்தையே பெற்றுக்
கொள்ளும் களநிலை இருக்கின்றது. இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸும் அம்பாரை மாவட்டத்தில் இணைந்து போட்டியிட்டால்
மூன்று ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாமென்று முஸ்லிம் காங்கிரஸ் கருதிக்
கொண்டது. ஆயினும், இக்கட்சிகள் இணைந்து தனித்துப போட்டியிட்டால் இரண்டு
ஆசனங்களையே பெற்றுக் கொள்ளும் என்பதே கணிதமாகும். அம்பாரை மாவட்டத்தில்
பொதுஜன பெரமுனவே அதிக வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனத்தைப் பெறும் என்று
தெரிகின்றது.
இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில்
இணைந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் இடையே பல தடவைகள் கொழும்பில்
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இப்பேச்சுவார்த்தையில் முஸ்லிம் காங்கிரஸே
அதிக ஆர்வம் காட்டியது. இரண்டு கட்சிகளும், ஐக்கிய மக்கள் சக்தியும்
இணைந்து போட்டியிட்டால் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப்
பெற்றுக் கொள்ளலாமென்று முஸ்லிம் காங்கிரஸ் கணிப்பிட்டுக் கொண்டது. இதற்கு
அமைவாக நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில்தான்
முடிவடைந்தன. இறுதியாக செவ்வாய்க்கிழமை (17.03.2020) காலை முதல் இரவு
வரைக்கும் மூன்று தடவைகள் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். இதன் போது கூட இணக்கப்பாடு
எட்டப்படவில்லை. இரு கட்சிகளும் விட்டுக் கொடுக்காத நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தமையே பேச்சுவார்த்தை தோல்விக்கு பிரதான காரணமாகும்.
பேச்சுவார்த்தைகளின்
போது முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
எம்.ஐ.மன்சூர், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய மூன்று வேட்பாளர்களை
நிறுத்துவதாகக் கூறியது. அதே போன்று அகில இலஙகை மக்கள் காங்கிரஸும் மூன்று
வேட்பாளர்களை நிறுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸால் கேட்கப்பட்டது. இவ்வாறு
முஸ்லிம் காங்கிரஸ் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை
வேட்பாளர்களாக நிறுத்தினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் ஒரு
பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை எற்படும் என்று
அக்கட்சிகயின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினர். அத்தோடு, தனித்துப்
போட்டியிட்டால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பிரை
எவ்வாறு பெற்றுக் கொள்ளலாமென்று காட்டுங்கள் என்றும் அகில இலலங்கை மக்கள்
காங்கிரஸின் பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம்
கேட்டுள்ளார்கள். இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு
தேசியப்பட்டில் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தருகின்றோம் என்று
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்போது, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவர் தேசியப்பட்டியல் விடயத்தில் தங்களை நம்ப
முடியாது என்றுள்ளார்.
இவ்வாறு நீண்;டு கொண்டிருந்த
பேச்சுவார்த்தையின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்
பதியூதீன் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் இரண்டு வேட்பாளர்களையும், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஒரு வேட்பாளரையும் நிறுத்துவோம்.
இதனால் யாருக்கும் பாதகமில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை
முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் இதனை
ஏற்றிருக்;க வேண்டும். மாறாக முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் வாக்குகளைப் பயன்படுத்தி தமது கட்சியில் மூன்று பாராளுமன்ற
உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்துவற்கு
எண்ணியது. முஸ்லிம்கள் சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப்
பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்கு பதிலாக முஸ்லிம் காங்கிரஸில் மூன்று
பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதிலேயே
விடாப்பிடியாக இருந்தது. இதனால்தான், அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய
மூன்று தரப்பினரும் இணைந்து போட்டியிடும் பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிவடைந்தமைக்கு காரணமாகும்.
மு.காவின் வேட்பாளர்கள்
முஸ்லிம்
காங்கிரஸ் இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவது என்பதில் எந்த வேட்பாளரை
போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சொல்லுவது அல்லது எந்த வேட்பாளர்களை
விட்டுக் கொடுப்பது என்பதில் ஏற்பட்ட இழுபறி நிலையே பேச்சுவார்த்தை
தோல்வியின் பின்னணியில் உள்ள காரணியாகும். முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், பைசால் காசிம்,
எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏ.எல்.நசீர் ஆகியோர்களும் தேர்தலில்
போட்டியிடுவதற்கு வாய்ப்புக்களை கேட்டுக் கொண்டார்கள். தற்போது முஸ்லிம்
காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில்
போட்டியிடுகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எம்.ஐ.மன்சூர், பைசால்
காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எல்.நசீர், ஏ.எல்.தவம் (கிழக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர்) எம்.எம்.பாஸித் (பொத்துவில் பிரதேச சபை
தவிசாளர்) ஆகிய 06 பேரும் போட்டியிடுகின்றார்கள்.
கடந்த
2005ஆம் ஆண்டு, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.
இத்தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை மாத்திரமே
நிறுத்தியது. ஆனால், இம்முறை 06 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிலும்
பொத்துவில் தொகுதியில் மாத்திரம் நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இதனால் பொத்துவில் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கப்படும்
வாக்குகள் சிதறடிக்கப்படும். அதே வேளை, பொத்துவில் தொகுதியில் ஒரு
பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வது என்பது முயற் கொம்பாக இருக்கும்
என்பது பொத்துவில் தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின்
கருத்துக்களாக இருக்கின்றன.
புத்தளத்தில் இணைந்து போட்டி
இதே
வேளை, முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புத்தளம்
மாவட்டத்தில் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுவதற்கு
தீர்மானித்துள்ளது. இம்மாவட்டத்தில் இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து
போட்டியிட்டால் மாத்திரமே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள
முடியும். அதனால், இங்கு இரு கட்சிகளும் ஒற்றுமைப்பட்டுள்ளமை பாராட்டத்
கூடியதாகும். இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் புத்தளம் மாவட்டத்தில்
ஒற்றுமைப்பட்ட போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடுவதற்கு
முன் வருமாறு சஜித் பிரேமதாஸவினால் இரு கட்சிகளின் தலைவர்களிடம்
கேட்கப்பட்டுள்ளது. ஆயினும் சஜித்தின் இவ்வேண்டுகோளை இரு கட்சிகளின்
தலைவர்களும் நிராகரித்துள்ளார்கள். ஆதலால், புத்தளம் மாவட்டத்தில்
முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு தராசு சின்னத்திற்கு வாக்களித்தால் ஒரு
பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது புத்தளம் மாவட்ட
முஸ்லிம்களுக்கு நல்லதொரு செய்தியாகும்.
வெற்றி வாய்ப்புக்கள்
இதே
வேளை, முஸ்லிம் காங்கிரஸில் 06 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்
கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போன்று இம்முறை மூன்று பாராளுமன்ற
உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை,
பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளில் சுமார் 70 ஆயிரும் முதல் 75
ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும், ஐக்கிய மக்கள் சக்தி
அம்பாரை தொகுதியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்
கொள்ளும். ஏனெனில், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர் சஜித்திற்கு சுமார் 41 ஆயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டன. ஐக்கிய
தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இந்த வாக்குகளும் பிளவுபடும்
என்பதில் ஐயமில்லை. இதனால், ஐக்கிய மக்கள் சக்தி அம்பாரை மாவட்டத்தில்
சுமார் 90 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும்.
மேலும், பொதுஜன பெரமுன அம்பாரை தொகுதியில் ஜனாதிபதி தேர்தலில் சுமார் 89
ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இக்கட்சியில்
நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளையும்
சேர்த்து சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்;றுக் கொள்ளும்
என எதிர் பார்க்கப்படுகின்றது. ஆதலால், பொதுஜன பெரமுன 03 பாராளுமன்ற
உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 பாராளுமன்ற உறுப்பினாகiயும்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும், தமிழ்த்
தேசிய கூட்டமைப்பு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக் கொள்ளும் என்பதே
எமது கணிப்பாகும்.
இதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் தனித்துப் போட்டியிட இருக்கின்றது. கடந்த பாராளுமன்றத்
தேர்தலிலும் இக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில்
நல்லாட்சிக்கான மக்கள முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. ஒரு ஆசனத்தையும்
பெற்றுக் கொண்டது. ஆனால், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட
இருக்கின்றது. இதனால், ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக
உழைப்புக்களை செய்ய வேண்டியுள்ளது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட இருக்கின்றது. கடந்த
பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய
கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. இதே
வேளை, முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எந்தக் கட்சியில் போட்டியிடுவார்
என்பது குறித்து இப்பத்தி எழுதும் வரைக்கும் தகவல்களில்லை.
திருகோணமலை
மற்றும் வன்னி மாவட்;டங்களில் முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஏனைய மாவட்டங்களிலும் இவ்விரு கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியுடன்
இணைந்து போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்
கண்டி மாவட்டத்திலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்
பதியூதீன் வன்னி மாவட்டத்திலும், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ்
அம்பாரை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Thanks: Vidivelli

0 comments:
Post a Comment