யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில்
மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக
யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும்
கேட்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய
கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை
விடுத்திருக்கின்றனர்.
கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில்
வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து
கொண்ட இருவர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவர்கள், மாவட்டங்களை சோ்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இவா்கள்
உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற
தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தரவும் என அவர் அவசர அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

0 comments:
Post a Comment