பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆதரவளிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்கள் மற்றும் மேலும் சில மாவட்டங்களில்
இணைந்து போட்டியிடலாம் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு மறுப்பு
தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பிரச்சினைக்கு
தீர்வுகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எந்த
தீர்வுகளும் இல்லை எனக் கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை
நடத்தியதுடன் அதன் போது இது தொடர்பாக தெளிவாக தெரியவந்ததாகவும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இம்முறை பொதுத்
தேர்தலில் வடக்கு, கிழக்கில் சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரசாரங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி
விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் இது தெளிவாக
புலப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment