• Latest News

    March 24, 2020

    ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட வேளையில் குறுந்தூர பயணங்களை மேற்கொள்வோருக்கான அறிவுறுத்தல்!

    பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொட்டாவ, கடவத்தை மற்றும் கட்டுநாயக்க போன்ற குறுந்தூர பயணங்களை மேற்கொள்வோர் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

    இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

    இந் நிலையில் மீண்டும் அப் பகுதிகளுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட வேளையில் குறுந்தூர பயணங்களை மேற்கொள்வோருக்கான அறிவுறுத்தல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top