அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்கள் இன்னும் மக்களைச்
சென்றடையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்
தெரிவித்துள்ளார்.
எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றயை தினம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அதில் மேலும்,
கொரோனா
வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் மக்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்காக பல
நிவாரணத்திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.
வீடுதேடிவந்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்பது உட்பட பல விடயங்கள் அதில் உள்ளன. இருந்தும் செயற்படுத்தப்படவில்லை.
கண்டி மாவட்டம் மட்டுமல்ல நாட்டில் பல இடங்களிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.
'கொரோனா'
வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, மக்களுக்கு
தேவையான அத்தியாவசியை சேவைகளை தங்குதடையின்றி அரசாங்கம் வழங்கவேண்டும்.
வைரஸிலிருந்து
மக்களை பாதுகாப்பதுபோல், பட்டினி சாவில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க
வேண்டும். நாமும் களத்தில் இருந்து சேவைகளை வழங்கிவருகின்றோம்.
மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஜனாதிபதி செயலணியின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளோம்.
எனவே, ஒரு சில பகுதிகளில் மட்டுமல்லாது பட்தொட்டியெங்கும் அரச சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment