எஸ்.என்.மீரா -கொரனா தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இலத்திரனியல் ஊடகங்களையும், இணைய தளங்ளையுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.
வீட்டில் இருக்கின்ற நிலையில் பொது மக்கள் தமது பொழுதை இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும், டயலொக் இணைப்பை பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பாவனையின் போது அதிக சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றார்கள். டயலொக் இன்டர்நெட் இணைப்புக்கள் பெரும்பாலும் மிகவும் குறைந்த வேகத்திலேயே செயற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
4ஜி இணைப்பை பெற்றுள்ள போதிலும், வைபைவ் இணைப்பின் போது 4ஜி என்று சிக்கனல் காட்டுவதற்கு பதிலாக சாதாரண இணைப்பாகவே காட்டுகின்றது என வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவித்தார்கள். இது பற்றி முறையீடு செய்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், டயலொக் வாடிக்கையாளர்கள் வேதனையுடனும், விசனத்துடனும் இருக்கின்றார்கள். அம்பாரை மாவட்டம் நிந்தவூர் பிரதேச வாடிக்கையாளர்களே எமக்கு இந்த முறையீட்டைச் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால, டயலொக் நிறுவனம் இந்த முறைப்பாடு குறித்து கூடிய கவனம் எடுக்க வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment