அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்
பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஏமாற்றியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்
ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சாதாரண மருத்துவர்களின் தொழிற்சங்கமே அன்றி தொற்று நோய்கள் தொடர்பான விசேட
மருத்துவ நிபுணர்களின் சங்கம் அல்ல என ஒன்றின் தலைவர் மருத்துவர் ருக்ஷான்
பெல்லன தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்,
கொழும்பு தேசிய காய்ச்சல் மருத்துவமனை மற்றும் தொற்று நோய் தொடர்பான விசேட
மருத்துவ நிபுணர்களின் தகவல்களை திருடிச் சென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரை
ஏமாற்றியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பணிகளை தொற்று
நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களிடம் கையளித்து விட்டு, அரச
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமக்குரிய பணிகளை செய்ய வேண்டும் எனவும்
ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment