கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகவுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளின் போது மேலதிக சலுகைகளை எதிர்பாராது பணியாற்றி வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும்,
கொரோனா வைரஸுக்கு எதிரான பணிகளின் போது, பணியாளர்கள் மட்டுமல்லாது
அவர்களின் குடும்பங்களும் ஆபத்தில் இருப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள்
தொழிற்சங்கம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், பொது சுகாதார
ஆய்வாளர்களின் முயற்சிகளை சுகாதார அதிகாரிகள் அங்கீகரிக்க தவறியமை குறித்து
தொழிற்சங்கம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
COVID-19 தொடர்பான
பணிகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு அடிப்படை வசதிகள்
இல்லாதது குறித்தும் தொழிற்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது போனால் எதிர்வரும் 4ம் திகதி முதல்
கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகுவதாக பொது சுகாதார
ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

0 comments:
Post a Comment