• Latest News

    September 03, 2020

    அம்பாறை கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் இன்று (03) காலை தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

    அம்பாறை, சங்கமன்கண்டி கடற் பிராந்தியத்தில் MT New Diamond எனும் கப்பல் இன்று (03) காலை தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் கப்பல் தீ விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும், குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதன் மீட்பு பணிகளுக்காக 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையிலிருந்து 2 கப்பல்களும் அம்பாந்தோட்டையிலிருந்து ஒரு கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

    குறித்த கப்பலின் மாலுமி உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள், இலங்கை கடற்படையின் மற்றுமொரு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உதவிக்கு விமானப்படையும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் இன்று (03) காலை தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top