• Latest News

    September 02, 2020

    அரசியலமைப்பின் 20 திருத்தத்திற்கு ஜே.வி.பி ஆதரவு

    புதிதாக கொண்டு வரவுள்ள அரசியலமைப்பு திருத்தங்களின' மூலமாக நாட்டில் உள்ள மாகாண சபை முறையை ஒழிப்தற்கு எடுக்கப்படும்  நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைவர் அனுரா குமார திசானநாயக்க தெரிவித்துள்ளார்.

    ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற  குழு விவாதத்தில் உரையாற்றிய எம்.பி. திஸ்நாயக்கஇ 13 மற்றும் 19 வது திருத்தங்களைப் போலவே 20 வது திருத்தம் அரசியலமைப்பின் திருத்தம் என்று கூறியுள்ளார்.

    ஜே.வி.பி தலைவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சம முன்னுரிமையை வழங்க வேண்டும்.

    எந்தவொரு குடிமகனும் இன்னொருவருக்கு இரண்டாம் நிலையாக உணரக்கூடாது, 20 வது திருத்தம் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் ஜே.வி.பி ஆதரவை வழங்கும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசியலமைப்பின் 20 திருத்தத்திற்கு ஜே.வி.பி ஆதரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top