• Latest News

    September 02, 2020

    அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

    அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

    ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

    தொழில் பெறுவதற்காக எவரும் பணம் இலஞ்சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும்.

    குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

    அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top