• Latest News

    October 28, 2020

    நிந்தவூர் அல் - மஸ்ஹர் 2019 உயர் தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

    எம்.எஸ் -
     
    நிந்தவூர் கமு/அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.  

    2019ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய 53 மாணவிகளில் 19 மாணவிகள்  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

    இப்பாடசாலையின் வரலாற்றில் 19 மாணவிகள் ஒரே தடவைகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஞ்ஞானப் பிரிவில் மாணவி எம்.என்.பாத்திமா ஹஸ்மத் Animal Science & Fisheries இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பாடசாலையிலிருந்து விஞ்ஞானத்துறை மூலமாக பல்கலைக் கழகம் செல்லும் முதல் மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வர்த்தகப் பிரிவில் 15 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 13 மாணவிகள் முகாமைத்துவத்;துறைக்கும், 02 மாணவிகள் வர்த்தகத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

    கலைப்பிரிவில் 03 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

    2019ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிஸாமுதீன் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

    2019ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு, அம்மாணவிகளை கற்பித்த ஆசிரியர்களுக்கும், பகுதித் தலைவர், பெற்றோர்கள் மற்றும்  ஊக்கமளித்த சகலருக்கும்  பாராட்டுக்களையும் நன்றிகளையும் பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன். பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 19 பேர் பல்கலைக் கழகம் செல்லுவதென்பது ஒரு வரலாற்றுத் சாதனையாகும். எமது பாடசாலையில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளன. அந்த வரிசையில் இந்த சாதனை பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் மற்றுமொரு அடையாளமாகும். இத்தகைய சாதனைகளை எமது பாடசாலை அடைந்து கொண்டிருப்பதற்கு எமக்கு எல்லா வகையிலும் உறுதிதுணையாகச் செயற்படும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயத்தின் பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கும், பாடசாலையின் அபிவிருத்தி சபைக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல் - மஸ்ஹர் 2019 உயர் தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top