• Latest News

    January 08, 2021

    உக்ரேனில் கொரோனா வைரஸ் தீவிரம்! 17 நாட்களுக்கு தேசிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நெருக்கடியான நிலை

    உக்ரேனில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 17 நாட்களுக்கு தேசிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இலங்கைக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்டகாலமாக சுற்றுலா பயணிகளின் உள்வருகைக்காக மூடப்பட்டிருந்த இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக மூன்று பிரிவுகளாக உக்ரேன் நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உக்ரைன் நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 17 நாள் நாடு தழுவிய முடக்க நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஜனவரி 24 வரை நீடிக்கும்,

    உணவகங்கள், அத்தியாவிசய பொருட்கள் விற்பனை கடைகள், சினிமாக்கள், உடற்பயிற்சி மையங்கள் கடைகள் ஆகியவை அடங்கும்.

    மேலும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவற்றில் வெகுஜனக் கூட்டங்களுக்குப் பிறகு புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரேனில் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். தினமும் சுமார் 7,000 புதிய தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.

    உக்ரேனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் மூலம் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உக்ரேனில் கொரோனா வைரஸ் தீவிரம்! 17 நாட்களுக்கு தேசிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நெருக்கடியான நிலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top